யோகி பாபுவின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

0
144

காமெடி நடிகர் யோகி பாபு, திரையுலகில் அறிமுகமாகி, நகைச்சுவை நடிகராக பிரபலமானதும் தொடர்ந்து இரவு-பகல் பார்க்காமல் வேலை செய்ததால் தூக்கம் போனதாக கூறுகிறார்.

தன் கண்கள் தூக்கத்துக்கு ஏங்கியதாகவும் இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு இப்போது இரவு-பகலாக நடிப்பதில்லை என்கிறார்.

இனிமேல் கதாநாயகனாக அல்ல, கதையின் நாயகனாக வருடத்துக்கு ஒரு படம் நடிப்பேன் என்று கூறும் யோகிபாபு, மற்ற படங்களில்,

நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிப்பதாகவும் கூறியுள்ளார்.

கடந்த வருடம் மட்டும் 25-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த யோகிபாபு, தற்போது கைவசம் 16 படங்கள் வைத்துள்ளார்.

இதுதவிர பன்னி குட்டி, மண்டேலா போன்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார்.

இவர் ஒரு நாள் சம்பளமாக ரூ.5 லட்சம் வாங்குவதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here