நேற்று இர்பான்கான்.. இன்று ரிஷிகபூர்! அடுத்தடுத்து உதிர்ந்த பாலிவுட் நட்சத்திரங்கள்

0
9

பழம்பெரும் நடிகரும், பிரபல ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூரின் தந்தையுமான ரிஷிகபூர்(67), உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் இன்று காலமானார்.

1973ஆம் ஆண்டு பாபி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான ரிஷி கபூர், தனது முதல் படத்திலேயே பிலிம் பேஃர் விருது வென்றவர். அதனைத் தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்த ரிஷி கபூர், 2019ஆம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கிய ‘தி பாடி’ என்ற படத்தில் இம்ரான் ஹாஸ்மியுடன் இணைந்து நடித்திருந்தார்.

1999ஆம் ஆண்டு ‘ஆ ஆப் லவுட் சாலென்’ என்ற படத்தை இயக்கியும் உள்ளார். பாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகர்களுடன் இணைந்தும் நடித்துள்ளார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நேற்றைய தினம் நடிகர் இர்பான் கான் உயிரிழந்த நிலையில், அடுத்த நாளே ரிஷி கபூரும் இறந்துள்ள சம்பவம், திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here