குடிபோதையில் நள்ளிரவில் விபத்து ஏற்படுத்திய யாஷிகா ஆனந்த்? புதிய சர்ச்சை

0
112

கவர்ச்சி நடிகை யாஷிகா ஆனந்த் தற்போது பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பாப்புலர் ஆனவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக இன்னும் அதிகம் ரசிகர்களை பெற்றார். ஆனால் அவர் நடிப்பில் கடைசியாக வந்த ஸாம்பி படம் படுதோல்வியடைந்தது.

இந்நிலையில் தற்போது ஒரு புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார் யாஷிகா. நேற்று முன்தினம் நள்ளிரவு அவரது சொகுசு கார் விபத்தில் சிக்கியுள்ளது.சென்னை Harrington Roadல் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதில் யாஷிகா குடிபோதையில் இருந்ததாகவும், விபத்து நடந்தவுடன் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டதாகவும் செய்தி பரவியது.

இது பற்றி போலீசிடம் விசாரித்ததில் அந்த விபத்தில் உணவு டெலிவரி செய்யும் நபர் காயமடைந்துள்ளார், ஆனால் அந்த காரில் யாஷிகா பயணிக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here