வைல்டு லைப் போட்டோகிராபராக மாறிய ஆண்ட்ரியா

0
23

காடுகளில் சுற்றி திரிந்து வனவிலங்குகளை படம் பிடிக்கும் போட்டோ கிராபராக ஆண்ட்ரியா, கா என்ற படத்தில் நடிக்கிறார்.

முழுக்க முழுக்க கதாநாயகியை முன்னிலைப்படுத்தி கதை அமைக்கப்பட்டு இருக்கிறது. இதில், சலீம்கோஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

நாஞ்சில் இயக்கும் கா படம், முழுக்க முழுக்க காடுகளில் படப்பிடிப்பு நடைபெறுகிறது. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெறுகிறது.

படத்தை பற்றி அவர் கூறியதாவது:- ‘‘மூணாறில், 30 நாட்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் இது வரை யாரும் செல்ல முடியாத இடங்களில் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம். பெரும் பகுதி படப்பிடிப்பு இரவு நேரங்களில் நடைபெற்றது.

அந்த காட்சிகளை திரையில் பார்க்கும் போது, மிகவும் பிரமிப்பாக இருக்கும். எழில் கொஞ்சும் காட்டின் அழகை வித்தியாச மான ஒரு கோணத்தில் ரசிக்கலாம்’’ என்கிறார், இயக்குனர் நாஞ்சில்.

‘பொட்டு’ படத்தை தொடர்ந்து ஷாலோம் ஸ்டூடியோஸ் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் ஆகிய இருவரும், ‘கா’ என்ற புதிய படத்தை தயாரித்து வருகிறார்கள்.

‘கா’ என்றால் இலக்கிய தமிழில் காடு, கானகம் என்று பொருள் என்பது மேலதிக தகவல் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here