நேற்று பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி ! ஏன் ?

0
19

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 69-வது பிறந்த நாளை வருகிற டிசம்பர் 12-ந் தேதி கொண்டாட இருக்கிறார்.

அதை பிரம்மாண்டமாக கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் ரஜினிகாந்த் தனது நட்சத்திர பிறந்தநாளை நேற்று தனது வீட்டில் கொண்டாடியுள்ளார்.

நேற்று தன்னுடைய பிறந்த நட்சத்திரமான திருவோணம் நாள் என்பதால், இதற்காக வீட்டில் சிறப்பு ஹோமம் நடத்தியுள்ளார்.

தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட 6 மொழிகளில் ரஜினி, இதுவரை 167 படங்களில் நடித்துள்ளார்.

இவரது 167-வது படமான தர்பார் வருகிற பொங்கல் விடுமுறையையொட்டி ரிலீசாக உள்ளது.

இதை தொடர்ந்து ரஜினியின் 168-வது படத்தை சிறுத்தை சிவா இயக்க இருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here