விஷாலுடன் மன முறிவு – யார் பக்கம் நாசர் ?

0
16

நடிகர் சங்கத்தில் மீண்டும் நாசர் தலைமையிலான அணி போட்டியிடுமா, தயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் போட்டியிடுவாரா என்ற கேள்விகள் எழுந்தன.

தயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் அணி சார்பாக, நாசரின் மனைவி கமீலா நாசர் போட்டியிடுவார் என்று தகவல் பரவியது. ஆனால், அவருடைய டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

’இன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருப்பதை நன்கு அறிவேன். அதற்காக கவலையும் அக்கறையும் கொள்கிறேன். இந்நிலைக்கு தள்ளியவரோடு கரம் கோர்க்கவில்லை. எந்த அணியோடும் இப்போது வரை இல்லை.

சங்கத்தின் மேன்மைக்காக உழைப்பவரோடு மட்டுமே என் கை இணையும் என்று பதிவிட்டுள்ளார்.

அவருடைய பதிவின் மூலம் விஷாலின் செயல்பாடு அவருக்குப் பிடிக்கவில்லை. எனவே விஷாலுக்கும், நாசருக்கும் இடையே பிளவு வந்துள்ளதாக திரையுலக வட்டாரங்களில் பேச்சு எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here