வால்டர் திரை விமர்சனம்

0
247

உதவி காவல் கண்காணிப்பாளாராக வேலை செய்கிற சிபிராஜ் எடுக்கும் அதிரடி படமே வால்டர்.

கும்பகோணத்தில் பெரும் அரசியல் வாதியாக ஈஸ்வரமூர்த்தி, அவரின் மகளாக ரித்விகா, மருமகனாக தொழிலதிபராக அபிஷேக் வினோத் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்கள்.

ஈஸ்வர மூர்த்திக்கு வலது கை போல இருக்கும் சமுத்திரகனியின் நண்பராக வரும் டாக்டர் நட்டி நடராஜ் திடீரென மருத்துவ கவுன்சிலால் பதவி நீக்கம் செய்யப்பட்டதால் தலைமறைவாகிறார்.

இதற்கிடையில் சமுத்திரக்கனி சுட்டுக்கொல்லப்படுகிறார். இந்த சம்பவங்களுக்கிடையில் ஊரில் மருத்துவமனையில் இருந்து பச்சிளம் குழந்தைகள் கடத்தப்படுகின்றன.

காணாமல் போன குழந்தைகள் சம்மந்தப்பட்ட பெற்றோரின் புகாரால் மீட்கப்பட்ட போதும் அடுத்த நாளே உயிரிழந்து விடுகின்றன.

இந்த சம்பவம் குறித்து விசாரணையில் ரத்தம் சம்மந்தபட்ட திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின்றன.

இதேவேளையில் சிபிராஜ் மற்றும் அவரின் காதலி ஷிரினுக்கு வாகன விபத்து ஏற்பட இந்த சம்பவத்தில் இருவரும் உயிர் பிழைத்தார்களா, சமுத்திரகனியின் கொலைக்கு காரணம் என்ன, நட்டிக்கு ஏன் தலைமறைவாக வேண்டும், குழந்தை கடத்தல் எதனால் என்பதன் பின்னணியே இந்த வால்டர் படத்தின் மீதிக்கதை.

இந்த படத்தில் வால்டர் போலிஸாக சிபி அதிரடி காட்ட முயற்சிக்கிறார்.

ஏற்கனவே அவர் நாய்கள் ஜாக்கிரதை படத்தில் போலிசாக வந்திருந்தாலும் இப்படத்தில் அவரின் பாடி லாங்குவேஜ் செயற்கையாக தெரிகின்றன.

அடிக்கடி மீசையை திருகுவதும், பெல்டை சரி செய்வதும் ரியலில் இருந்து சற்று வித்தியாசப்படுகிறது.

ஹீரோயினை எங்கோ பார்த்தது போலவே இருக்கிறதே என யோசித்த போது நெஞ்சம் உண்டு நேர்மையுண்டு படம் நினைவிற்கு வருகிறது.

ஹீரோவை துரத்தி துரத்தி காதலிப்பது மனதை ஈர்க்கவில்லை. இருவரும் வரும் ரொமான்ஸ் பாடல் கதையிலிருந்து டேக் டைவர்சன் என்பது போல தான்.

டாக்டர் நட்டி அனுபவமான தன் நடிப்பை வெளிப்படுத்தினாலும் சட்டென வில்லனாவதும், ஹீரோயிஸம் செய்வதும் கொஞ்சம் ட்விஸ்ட்.

பிக்பாஸ் சீசன் 2 வின்னர் ரித்விகாவை இப்படத்தில் பார்க்க முடிந்தது.

இடையில் திடீரென கவர்ச்சியான தோற்றத்தில் சனம் ஷெட்டி உள்ளே வந்து போவது என்ன இது இப்படி என்ற கேள்வியை கேட்கிறது.

இயக்குனர் அன்பரசன் படத்தில் முதல் பாதி குறித்த சரிவர திட்டமிடல் இல்லையோ, எடிட்டிங் இன்னும் பக்காவாக இருந்திருக்கலாம் என்ற குறைபாடுகள் ஏற்படுகிறது.

பி.வாசு இயக்கத்தில் 1993 ஆம் வருடம் சத்யராஜ், சுகன்யா நடிப்பில் வெளியாகி 200 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றிபெற்ற வால்டர் வெற்றிவேல் படத்தில் இருந்து எடுக்கப்பட்ட தலைப்பு தான் வால்டர்.

இந்த படத்திலாவது தனது மகன், முன்னேறிவிடுவானா என்ற ஏக்கம் சத்யராஜுக்கு இருப்பதனால் என்னவோ இந்த தலைப்பை கொடுத்திருக்கிறார்.

ஆனால், இந்த படம் 20 நாட்கள் ஓடினாலே வெற்றிப்படம் தான் போல…

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here