வரம் பெற்ற விவேக்

0
18

கோலிவுட்டில் கடந்த 1987-ம் ஆண்டு இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கிய ’மனதில் உறுதி வேண்டும்’ படத்தின் மூலம் நடிகர் விவேக் திரையுலகில் அறிமுகமானார்.

இதைதொடர்ந்து பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து புகழ்பெற்ற விவேக், தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தார்.

தற்போது விவேக், மரம் நடுதல் போன்ற சமூக பணிகளிலும் ஆர்வம்காட்டி வருகிறார்.

இந்நிலையில் விவேக்கிற்கு இயக்குனர் பாலசந்தரின் மகள் புஷ்பா கந்தசாமி பேனா ஒன்றை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து விவேக் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: ”யாருடைய எழுத்துக்களைப் படித்தும் படமாகப் பார்த்தும் பரவசம் அடைந்து திரைத்துறைக்கு வந்தேனோ, அவர் எழுத உபயோகித்த பேனாவே எனக்கு கிடைத்தது… பரிசு அல்ல… வரம்! அன்போடு அளித்த புஷ்பா கந்தசாமி அவர்களுக்கு என் இதய நன்றிகள்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here