விஜய் சேதுபதி – குவியும் நெகட்டிவ் வாய்ப்புகள் !

0
31

கோலிவுட்டில் சுந்தரபாண்டியன், விக்ரம் வேதா, பேட்ட போன்ற படங்களிலில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதி, தற்போது மாஸ்டர் படத்திலும் வில்லனாக நடித்துவருகிறார்.

அத்துடன், தெலுங்கு படங்களிலும் வில்லன் வாய்ப்புகள் வந்தால் அதையும் விடுவதில்லையாம்.

பிச்சிபாபு சனா இயக்கத்தில் உருவாகும் உப்பெனா என்ற தெலுங்கு படத்திலும் வில்லனாக நடித்து இருக்கிறார்.

இதில் கதாநாயகனாக வைஷ்ணவ் தேஜ், நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார்கள்.

உப்பெனா படத்தின் விஜய் சேதுபதி தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இந்த தோற்றம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. படம் ஏப்ரல் 2ந் தேதி திரைக்கு வருகிறது.

விஜய் சேதுபதி நடித்துள்ளதால் தமிழிலும் டப்பிங் செய்து வெளியிட ஏற்பாடுகள் நடக்கிறது.

அடுத்து தெலுங்கில் பிரபல ஹீரோ அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்திலும் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here