இரண்டாம் பாகத்திற்கு தயாரான விஜய்சேதுபதி-அசோக் செல்வன் படங்கள்

0
15

தயாரிப்பாளர் சி.வி.குமார் ‘மாயவன்’ படத்தை இயக்கினார். சமீபத்தில் இன்று நேற்று நாளை படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதை தயாராகிவிட்டதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவரது தயாரிப்பில் வெளியான சூது கவ்வும், தெகிடி, மாயவன் படங்களின் இரண்டாம் பாகமும் தயாராவதாக அறிவித்துள்ளார். இரண்டாம் பாகத்திற்கான கதை தயாராகிவிட்டதாகவும் அவர் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

விஜய்சேதுபதி, அசோக் செல்வன், பாபி சிம்ஹா நடிப்பில் காமெடி படமாக வெளியான சூது கவ்வும் சூப்பர் ஹிட்டானது. அசோக் செல்வன் ஹீரோவாக நடித்த தெகிடி படமும் வெற்றி பெற்றதுடன், வெகுவாக பாராட்டப்பட்டது. மாயவன் வித்தியாசமான கதைக்களத்தில் வெளியானது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here