அஜித் பெயரை விஜய் பயன்படுத்தியதற்கான காரணம் இது தான் !

0
60

மாஸ்டர் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில், விஜய் கோட்டு சூட்டு அணிந்து கலந்து கொண்டது குறித்து நிகழ்ச்சி தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த விஜய், “நண்பர் அஜித் மாதிரி டிரெஸ் பண்ணலாம் என்று கோட் சூட் அணிந்து வந்தேன். எனக்கு இது பொருத்தமாக உள்ளதா?” என்று கேட்டார். அதற்கு தொகுப்பாளர் பிரமாதமாக உள்ளது என்றார்.

சமூக வலைத்தளத்தில் விஜய், அஜித் ரசிகர்கள் அடிக்கடி மோதிக்கொள்வது உண்டு. விஜய் படங்கள் ரிலீசாகும்போது எதிராக ஹேஷ்டேக்குகளை அஜித் ரசிகர்கள் உருவாக்குவதும், அஜித் படங்கள் வரும்போது விஜய் ரசிகர்கள் ஹேஷ்டேக்கை டிரெண்டிங் செய்வதும் வழக்கமாக நடந்தன.

இந்த மோதல் கவலை அளிப்பதாக உள்ளது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். அவர்கள் சண்டையை கட்டுப்படுத்த விஜய் செய்த மாயை இது என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here