விஜய்யுடன் போனில் பேசிய தெலுங்கு டாப் ஹீரோ.. நேரில் சந்தித்த முன்னணி தயாரிப்பாளர் கூறியது

0
90

நடிகர் விஜய்யின் பிகில் படம் மூலம் தெலுங்கு மார்க்கெட்டிலும் விஜய் தடம் பதித்துள்ளார். விசில் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆன அந்த படம் அதிகம் ரசிகர்களை ஈர்த்தது. தெலுங்கு பேசும் மாநிலங்களில் மட்டும் 20 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் வந்தது.

இந்நிலையில் முன்னணி தெலுங்கு தயாரிப்பாளர் மகேஷ் கோனேறு விஜய்யை நேரில் சந்தித்து பேசியுள்ளார். விஜய் சாரின் எளிமை மற்றும் பெருந்தன்மையை பார்த்து வியந்ததாக அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலும் போன் மூலம் விஜய் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆருடன் பேசியதாக தெரிவித்துள்ளார்.

தளபதி64 ரிலீஸ் சமயத்தில் தெலுங்கு ரசிகர்களிடம் அதிகம் interact செய்யப்போவதாகவும் விஜய் கூறினாராம்.

 

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here