கொரோனா நிவாரண நிதி அளித்த நடிகர் விஜய்!

0
9

இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பிரபலங்கள் பலரும் பிரதமர், முதல்வர் நிவாரண நிதி திட்டத்தில் நிதி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜய் 1 கோடியே 30 லட்சம் ரூபாய் நிதி அளித்துள்ளார். இதில் பிரதமர் நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாய், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாய், பெப்சி தொழிலாளர் கூட்டமைப்புக்கு 25 லட்சம் ரூபாய், கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா முதல்வர் நிவாரண நிதிக்கு தலா 5 லட்சம் ரூபாய் என அவர் நிதியளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து #RealHeroThalapathyVIJAY என்ற ஹேஷ் டேக்கை விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here