ரசனை மாறுகிறது – விஜய் எடுத்த முடிவு விபரீதமானதா ?

0
56

டோலிவுட்டில் வெளியான அர்ஜுன் ரெட்டி படம் மூலம் பிரபலமான விஜய் தேவரகொண்டா, அந்த படத்தை தொடர்ந்து கீதா கோவிந்தம், டாக்சிவாலா, நோட்டா, டியர் காம்ரேட் உள்ளிட்ட படங்களில் நடித்து வெற்றி நாயகனாக வலம் வருகிறார்.

இவர் நடிப்பில் அடுத்ததாக உருவாகி இருக்கும் படம் ‘வேர்ல்டு பேமஸ் லவ்வர்’.

இப்படத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நான்கு ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படம் காதலர் தினத்தன்று ரிலீசாக உள்ளது.

இதையொட்டி இப்படத்தின் அறிமுக விழா ஐதராபாத்தில் நடைபெற்றது.

இதில் பேசிய விஜய் தேவரகோண்டா, ரசிகர்களின் ரசனை மாறி கொண்டே இருப்பதால், இனி காதல் தொடர்பான படத்தில் நடிக்க போவதில்லை, மேலும் ரசிகர்களுக்கு புது அனுபவங்களை தரும் படத்திலேயே நடிக்க விரும்புவதாக கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here