ரொம்ப கஷ்டமா இருக்கு ! ஆனா, மனநிறைவோடு வேலை செய்றோம் – ஏ.ஆர்.ரகுமான்

0
145

ஏ.ஆர் ரஹ்மான் தற்போது மணிரத்னம் இயக்கி வரும் பொன்னியின் செல்வன் படத்துக்கு இசை அமைத்து வருகிறார்.

பொன்னியின் செல்வன் வரலாற்று சிறப்பு மிக்க படம். மேலும் மணிரத்னம் இந்த படத்துக்கு மிகவும் தனித்துவமான இசையை கேட்கிறார். அதே நேரம் இந்த படம் நடக்கும் காலத்தையும் மனதில் வைத்து இசையை உருவாக்கவேண்டும்.

இது எங்கள் குழுவினருக்கு மிகவும் கஷ்டமானதாக இருக்கிறது.

இருந்தாலும் மன நிறைவோடு ஒவ்வொரு விசயத்தையும் செய்கிறோம்.

கிட்டத்தட்ட 6 மாத காலங்கள் நாங்கள் இந்த படத்தின் இசைக்காக பணியாற்றியுள்ளோம் என்று ரகுமான் கூறியுள்ளார்.

லைக்கா புரொடொக்ஷன்ஸ் மற்றும் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்து வரும் பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய், ஜெயராம், த்ரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி, அர்ஜூன் சிதம்பரம், லால், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் உள்ளிட்டோர் நடித்துவருகிறார்கள்.

இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் முதல் பகுதி தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here