பிரபல தெலுங்கு நடிகருக்கு வாழ்த்து கூறிய வெங்கட் பிரபு

0
10

சென்னை 600028 இரண்டாம் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சிம்பு நடிக்கும் மாநாடு படத்தை  வெங்கட் பிரபு இயக்கி வருகிறார்.

பலகட்ட பிரச்சனைகளுக்கு பிறகு ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்நிலையில், பிரபல தெலுங்கு நடிகர் மஞ்சு மனோஜ் நடிக்கும் படத்திற்கு வாழ்த்து கூறியுள்ளார்.

மஞ்சு மனோஜ் நடிப்பில் ‘அஹம்பிரம்மாஸ்மி’ என்ற படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்ட்டரை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வெங்கட் பிரபு, ‘எனது சகோதரர் மனோஜுக்கு என் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்.

மேலும் படம் மிகப்பெரிய வெற்றி பெற அஹம்பிரம்மாஸ்மி குழுவுக்கு வாழ்த்துக்கள்’ என பதிவிட்டுள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here