சிம்பு பெயர் வைக்க வெங்கட் பிரபு அழைப்பு

0
38

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படம் பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு தற்போது தான் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். பாராதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். எஸ்.ஏ.சந்திரசேகரன், பிரேம்ஜி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

படத்தில் சிம்பு இஸ்லாமிய இளைஞராக நடிக்கிறார். அவரது கதாபாத்திரத்தின் பெயரை ரசிகர்கள் தேர்வு செய்து தர வேண்டும் என படக்குழுவினர் சார்பாக வெங்கட்பிரபு கேட்டுள்ளார்.

மாநாடு படத்தில் சிம்புவின் கதாபாத்திரத்திற்கு எந்த பெயர் பொருந்துகிறதோ அதனைத் தான் தேர்வு செய்வோம் என்றும், பொருத்தமான பெயரை தரும் ரசிகர், மாநாடு படப்பிடிப்பில் ஒருநாள் முழுவதும் பங்கேற்கலாம் என படத்தின் இயக்குநர் வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here