நடிகர் விவேக்கின் வெள்ளைப் பூக்கள் 2 – முக்கிய அப்டேட்

0
39

நடிகர் விவேக்கின் வெள்ளைப் பூக்கள் படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளது.

முந்தைய பாகம் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

விவேக் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

அமெரிக்காவில் இருக்கும் மகன் வீட்டுக்கு செல்லும் விவேக் அங்கு நடக்கும் மர்ம கொலைகளை துப்பு துலக்கி குற்றவாளிகளை எப்படி கண்டு பிடிக்கிறார் என்பது கதை.

பெரும்பகுதி படப்பிடிப்பை அமெரிக்காவில் நடத்தி இருந்தனர். விவேக் இளங்கோவன் இயக்கி இருந்தார்.

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்துக்கான திரைக்கதையை எழுதும் பணியில் இயக்குனர் ஈடுபட்டுள்ளதாகவும், அந்த பணிகள் முடிந்ததும் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் நடிகர் விவேக் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here