பார்ட்னர் நீ வெட்கப்படுறீயா, எப்படி? பதில் அளித்த வரு ..

0
17

தாரை தப்பட்டை தெருக் கூத்து நடிகையாக ஆடி அசத்திய வரலட்சுமியை சக நடிகர், நடிகைகள் சுருக்கமாக வரு என்று அழைக்கின்றனர்.

ஹீரோயினாக நடித்து வந்த நிலையில் திடீரென்று வில்லி வேடத்துக்கு மாறி சண்டக்கோழி 2, சர்க்கார் போன்ற படங்களில் வித்தியாசமான பரிமாணத்தில் தோன்றி நடித்தார்.

எப்போதுமே கோபத்துடனே அவரது புகைப்படங்கள் நெட்டில் வலம் வந்துக்கொண்டிருந்தநிலையில் தனது இணைய தள பக்கத்தில் வெட்கப்படுவதுபோல் அமர்ந்திருக் கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார் வரலட்சுமி.

நடிகர் பிரசன்னா வரலட்சுமி வெளியிட்டிருந்த வெட்கப்படும் புகைப்படத்தை பார்த்து உடனே ‘பார்ட்னர் நீ வெட்கப்படுறீயா, எப்படி?’ என்று ஆச்சர்யமாக மெசேஜ் போட்டார்.

அதற்கு பதில் அளித்த வரலட்சுமி, ‘நீங்கெல்லாம் இப்படி கேட்பீங்கன்னு தெரிஞ்சிதான் “நான் எப்பொழுதாவது” என அந்த படத்துக்கு கேப்ஷன் போட்டிருந்தேன்’ என பதில் அளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here