தெய்வமகள் சத்யாவாகத்தான் வாழ்கிறேன் – நடிகை வாணி போஜன்

0
90

சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்திருப்பவர் வாணி போஜன். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஓ மை கடவுளே’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், நடிகை வாணி போஜன் தான் சினிமாவுக்கு வந்தது குறித்து கூறுகையில், ‘தெய்வமகள் சீரியலில் நடிக்கும்போதே பெரிய திரைகளில் இருந்து வாய்ப்புகள் வந்தன. அந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டால், தொடரில் கவனம் செலுத்த முடியாமல் போகும் என்பதால் வாய்ப்புகளை தட்டிக் கழித்தேன்.

பெரியத்திரை கைகொடுக்குமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அதே சமயம் ரசிகர்கள் மனதில் இன்னும் தெய்வமகள் சத்யாவாகத்தான் வாழ்கிறேன். அதனால் சத்யாவை மிஞ்சும் கதாப்பாத்திரம் சினிமாவில் அமைய வேண்டும். அதுவரை காத்திருப்பேன்’ என தெரிவித்துள்ளார்.

விமானப் பணிப்பெண்ணாக தனது பயணத்தை துவங்கிய வாணி போஜன்,  ‘தெய்வமகள்’ சீரியல் மூலம் பிரபலமடைந்தார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here