வலிமை படத்தில் இப்படி ஒரு காட்சியா.. டூப் இல்லாமல் நடித்த அஜித்! ஆச்சர்யத்தில் ரசிகர்கள்

0
102

தல அஜித் நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு அதே கூட்டணியில் தற்போது இணைந்துள்ள படம் தான் வலிமை. இந்த படத்தில் அஜித் போலீசாக நடிக்கிறார் என தயாரிப்பாளர் போனி கபூர் ஏற்கனவே அறிவித்துவிட்டார்.

இதன் ஷூட்டிங் ஒரு சில வாரங்கள் முன்பு தான் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் துவங்கியது. அங்கு மிக மாஸான ஸ்டண்ட் காட்சிகளை தான் முதலில் படமாக்கியுள்ளனர்.

அஜித் 100 அடி உயரத்தில் இருந்து கீழே குதிப்பது போல அதில் ஒரு காட்சி இருக்கிறதாம். அதில் டூப் பயன்படுத்தாமல் தானே நடித்துள்ளாராம் அஜித்.
இந்த செய்தி வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

முதற்கட்ட ஷூட்டிங் ஹைதராபாத்தில் முடிந்துள்ள நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவுள்ளது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here