புதிய படத்திற்கான அறிவிப்பு வரும் – வடிவேலு

0
31

இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க அவர் மறுத்ததால் இயக்குனர் ஷங்கர் அளித்த புகாரின் பேரில் வடிவேலுவை புதிய படங்களுக்கு ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது.

இதனால் கடந்த சில வருடங்களாக படங்களில் வடிவேல் நடிக்கவில்லை. தயாரிப்பாளர் சங்கத்தின் தடையை மீறி அவருக்கு வாய்ப்பு அளிக்க பட அதிபர்கள் தயங்கினர். சில வாரங்களுக்கு முன்பு கமல்ஹாசனின் தலைவன் இருக்கின்றான் படத்தில் வடிவேல் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.

ஆனாலும் கமலின் அரசியல் பணிகள், இந்தியன்-2 பட வேலைகள் போன்றவற்றால் தலைவன் இருக்கின்றான் படப்பிடிப்பை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில் ‘வெப்’ தொடர்களில் நடிக்க வடிவேலுக்கு அழைப்புகள் வருகின்றன. அதை ஏற்று ‘வெப்’ தொடருக்கு மாற வடிவேல் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து நடிகர் வடிவேலு கூறும்போது, நான் வெப் சீரிஸ் எதிலும் நடிக்கவில்லை. ஆனால் படம் தொடர்பான அறிவிப்பு ஜனவரி மாதத்தில் வெளிவரும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here