பிகிலுடன் மோதல்.. தீபாவளி ரிலீஸ் உறுதி செய்த இரண்டு படங்கள்

0
119

பிகில் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.

பொதுவாக விஜய் படங்கள் வெளியாகிறது என்றால் மற்ற படங்கள் சற்று ஒதுங்கித்தான் நிற்கும். அந்த அளவுக்கு விஜய் படங்களுக்கு வரவேற்பு இருக்கிறது.
ஆனால் இந்த வருடம் நிலைமை வேறு விதமாக உள்ளது. பிகில் படத்துடன் மோதல் உறுதி என இரண்டு முக்கிய படங்கள் அதிகாரபூர்வமாக தீபாவளி ரிலீஸை உறுதி செய்துள்ளன.

கார்த்தி நடித்துள்ள கைதி மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ள சங்கத்தமிழன் ஆகிய படங்கள் தீபாவளி ரிலீஸ் என போஸ்டர் போட்டு உறுதி செய்துள்ளன.
இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால் கைதி இயக்குனர் லோகேஷ் தான் அடுத்து தளபதி64 படத்தினை இயக்குகிறார். அதில் சங்கத்தமிழன் படத்தில் நடித்த விஜய் சேதுபதி தான் ஹீரோ.

தற்போது ஒரே படத்தில் பணியாற்றுபவர்கள் இப்படி பாக்ஸ் ஆபிசில் மோதிக்கொள்வது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here