அந்த சுடிதார் இவ்வளவு மாயம் செய்யும் ன்னு எதிர்பார்க்கல – திரிஷா

0
37

கோலிவுட்டில் கடந்த ஆண்டு திரிஷா நடிப்பில் வெளியான 96′ படத்தில் நடித்ததற்காக பல விருதுகளை வாங்கி வருகிறார்.

சமீபத்தில் ஒரு விருது நிகழ்ச்சியில் திரிஷா பேசும் போது,  ’96’ படத்துக்கான வரவேற்பு எதிர்பார்க்காத ஒன்று. அது நல்ல கதாபாத்திரம் என்று தெரியும்.

அதில் உள்ள ராம், ஜானு கதாபாத்திரங்களுடன் ரசிகர்கள் தங்களைப் பொருத்திப் பார்ப்பார்கள் என்று எண்ணினேன். ஆனால், சாதாரண ஒரு மஞ்சள் சுடிதார் அணிந்து நடித்தது இந்த அளவுக்கு வைரலாகியுள்ளது.

சினிமாவில் ஒரு சில கதாபாத்திரங்கள் மேஜிக் போன்றுதான் நிகழும்.

’விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் ஜெஸ்ஸி கதாபாத்திரத்துக்குப் பிறகு ’96’ படத்தின் ஜானு கதாபாத்திரம் தான் இப்படியொரு அற்புதம் செய்தது.

காதல் கதைகள் எளிதாக மக்களைச் சென்றடைகிறது. ஆனால்
எனக்கு பள்ளியிலோ, கல்லூரியிலோ காதல் கதை எதுவும் கிடையாது.

இருப்பினும் இந்த 96 கதையில் ஏதோ ஒன்று என் மனதை தொட்டது என திரிஷா கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here