பாலிவுட் படத்திலிருந்து கீர்த்தியை தூக்கி எறிந்தனர் – காரணம் என்ன ?

0
74

பாலிவுட்டில் போனிகபூர் தயாரிப்பில், அமித் ரவிந்தர்நாத் ஷர்மா இயக்கும் ‘மைதான்’ படத்தில் கீர்த்திக்கு நடிக்க வாய்ப்பு வந்தது.

இந்திய முன்னாள் கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளரான சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது.

அஜய் தேவ்கான் சையத் அப்துல் ரஹீமாகவும், அவரது மனைவியாக கீர்த்தி சுரேசும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. படப்பிடிப்பிலும் கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டு நடித்தார்.

இந்த நிலையில் ‘மைதான்’ படத்தில் இருந்து கீர்த்தி சுரேசை திடீரென்று நீக்கி விட்டு பிரியாமணியை ஒப்பந்தம் செய்துள்ளனர்.

மைதான் படத்துக்காக கீர்த்தி சுரேஷ் உடற்பயிற்சி செய்து உடம்பை குறைத்தார். இதுவே அவர் நீக்கத்துக்கு காரணம் என்கின்றனர்.

அதாவது, மனைவியாகவும் ஒரு குழந்தைக்கு தாயாகவும் நடிக்க பேச்சுவார்த்தை முன்வைக்கப்பட்டது. ஆனால், கீர்த்தி உடம்பை குறைத்ததனால் இந்த நீக்கம் ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here