திருப்பாச்சி இயக்குனரின் ட்வீட்!

0
64

நடிகர் விஜய் கேரியரில் கில்லி படத்திற்கு பிறகு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது பேரரசு  இயக்கிய திருப்பாச்சி திரைப்படம். தங்கச்சி செண்டிமெண்ட், மாஸ் ஆக்ஷன் காட்சிகள் என பக்கா மசாலா படமாக வெளியான இப்படம், 200 நாட்களை கடந்து ஓடியது.

இந்நிலையில் நேற்றைய தினம் சன் தொலைக்காட்சியில் திருப்பாச்சி திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது. இதனை குறிப்பிட்டு படத்தின் இயக்குனர் பேரரசு ட்வீட் செய்துள்ளார்.

அதில், ‘நேற்று சன் TV-யில் திருப்பாச்சி திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது. நேற்றுதான் படம் ரிலீஸ் ஆனது போல் நிறைய பேர் இன்று தொலைபேசியில் பாராட்டினார்கள். பாராட்டிய அனைவருக்கும் நன்றி’ என தெரிவித்துள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here