சூர்யாவின் படங்களை திரையரங்கில் வெளியிட தடை?

0
28

ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், பல திரைப்படங்களின் வெளியீடு தள்ளிப்போயுள்ளன. இந்நிலையில் ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ படம் OTT Platformகளில் ஒன்றான அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியானது.

இதற்கு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் கூறுகையில்,

திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியிடத்தான் எடுக்கப்படுகின்றன. திரையரங்குகளுக்கு தான் முன்னுரிமை அளிக்க வேண்டும். சூர்யாவின் 2D  நிறுவனம் பொன்மகள் வந்தாள் படத்தை அமேசான் பிரைமில் வெளியிட இருப்பதை கண்டிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

மேலும், OTT Platformகளில் வெளியிட வேண்டாம் என்ற தங்களின் கோரிக்கைக்கு தயாரிப்பாளர் பதிலளிக்கவில்லை, எனவே 2D என்டர்டெயின்மென்ட்டில் இருந்து எதிர்கால திரைப்படங்கள் மற்றும் சூர்யா சம்பந்தப்பட்ட திரைப்படங்கள் திரையரங்குகளில் திரையிடப்படாது என்று அவர் தெரிவித்துள்ளர்.

ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் OTT-யில் வெளியானால், சூர்யாவின் சூரரைப் போற்று படம் வெளியாவதில் சிக்கல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here