‘தனிஒருவன்’ சித்தார்த் அபிமன்யு கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?

0
174

ஜெயம் ரவி, அரவிந்த்சாமி நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளியான தனிஒருவன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. ரீமேக் படங்களை இயக்குபவர் என்ற தன் மீதான விமர்சனத்தை, சொந்த கதையில் உருவான தனிஒருவன் மூலம் மோகன் ராஜா உடைத்தார்.

விமர்சகர்கள் மத்தியில் பெரிதும் பாராட்டப்பட்ட தனிஒருவன், வசூலிலும் சக்கை போடு போட்டது. ஜெயம் ரவியின் கதாபாத்திரத்தை விட, அரவிந்த்சாமியின் சித்தார்த் அபிமன்யு கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில், சித்தார்த் அபிமன்யு கதாபாத்திரத்திற்கு அஜித் தான் சரியாக இருப்பார் என முதலில் நினைத்ததாக, இயக்குனர் மோகன் ராஜா சமீபத்திய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் கன்னட நடிகர் சுதீப், தெலுங்கு நடிகர் ராணா டகுபதி ஆகியோரும் அந்த பாத்திரத்திற்கு பரிசீலணையில் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here