தளபதி 66 வது படம்…மீண்டும் விஜயுடன் இணையும் டீம்…தயாரிப்பாளர் கருத்து…

0
158

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய்..அவர் நடித்துள்ள மாஸ்டர் வெளியாக உள்ள நிலையில், தளபதி 65 இல் ஏ ஆர் முருகதாஸ் உடன் இணைய உள்ளார்..சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் தமன் இசையமைக்க உள்ளார்…

தற்போது தளபதி 66 படம் குறித்து தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி கருத்து தெரிவித்துள்ளார்..தளபதி 66 படம் குறித்து சமூக வலைத்தளங்களில் பேச்சுகள் வந்த வண்ணம் உள்ளது…மெர்சல் படம் தயாரித்த தேனாண்டாள் பட நிறுவனமே இப்படத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்பட்டது…

இதையடுத்து தயாரிப்பு நிறுவனத்தை சேர்ந்த ஹேமா ருக்மணியிடம் இதுபற்றி கேட்டோம். அப்போது அவர் கூறியதாவது, ”விஜய் சாரை சந்தித்தது ஒரு சாதாரண சந்திப்பு தான். அவர் எதிர்காலத்தில் கண்டிப்பாக ஒரு படம் பண்ணுவோம் என கூறினார். தற்போது எதுவும் உறுதியாகவில்லை. மேலும் இதை பற்றி இப்போது பேசுவது ரொம்பவே சீக்கிரமாக தெரிகிறது. ரசிகர்களை போலவே நாங்களும் உற்சாகமாக இருக்கிறோம். மெர்சல் கொடுத்த அதே மேஜிக்கை மீண்டும் கொடுக்க முடியும் என நம்புகிறோம்” என்று அவர் தெரிவித்தார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here