நான் எதையும் மறக்கல – டாப்ஸி

0
12

பாலிவுட்டை பொறுத்தமட்டில் இதுவரை 15 படங்களில் நடித்திருந்தாலும் இன்னும் ஒரு புது நடிகையை போலத்தான் என்னை நடத்துகிறார்கள் என்று டாப்சி கூறியிருக்கிறார்.

அதே சமயம், நான் நடித்த 4 படங்கள் சரியாக போகாததால் என்னை பற்றி தென்னிந்திய திரையுலகில் அதிர்ஷ்டம் இல்லாதவர் என்று கூறுகிறார்கள்.

அப்படி கூற ஆரம்பித்தார்கள். மரத்தை சுற்றி நான்கு பாட்டு பாடுவதும் மேற்கொண்டு சில சீன்களில் மட்டுமே நடிப்பதுபோன்று எனது கதாபாத்திரங்கள் இருந்தது.

திரும்ப திரும்ப ஒரே பாணியிலான படங்கள் உருவானதால் அவை தொடர் தோல்வியானது’ என்றார்.

‘தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய படங்கள் மீது எனக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. ஒரு கட்டத்தில் பாலிவுட்டில் இந்தி படங்களில் நடிக்க ஆசைப்பட்டேன்.

தமிழ் திரையுலகம்தான் கேமரா, நடிப்பு போன்ற எல்லா அடிப்படையையும் கற்றுத்தந்தது, நான் எதையும் மறக்க வில்லை என்கிறார் டாப்ஸி.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here