ஓவர் கவர்ச்சி உடம்புக்கு ஆகாது ! அட்வான்சை திருப்பி கொடுத்த நாயகி

0
415

கோலிவுட்டில் புதிதாக உருவாக இருக்கும் ஒரு தமிழ் படத்துக்கு தழுக் … மொழுக் … என்று வசீகர உடற்கட்டை கொண்ட ஒரு கதாநாயகி தேவைப்பட்டார்.

இதற்கு யாரை நடிக்க வைக்கலாம் ? என்று படக்குழுவினருடன் தயாரிப்பாளர் ஆலோசனை நடத்தினார்.

எல்லோரும் ஒருமித்த குரலில் அங்காடி நாயகியின் பெயரை சொன்னார்களாம். இதனால் அவரையே தயாரிப்பாளர் ஒப்பந்தம் செய்துள்ளார். படப்பிடிப்பும் தொடங்கியது.

முதல்நாள் படப்பிடிப்பிலேயே அங்காடி நாயகியிடம் ஒரு கால் சட்டையை கொடுத்து அணிந்து வரச்சொன்னார்களாம். நொந்து போனார் நாயகி.

இந்த அளவுக்கு கவர்ச்சியாக நடிக்க முடியாது என்றும் நான் வாங்கிய முன்பணத்தை திருப்பி கொடுத்து விடுகிறேன் என்றாராம்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here