இதைப் பெரிதுபடுத்துவது சரியல்ல, விஜய் இப்படி செய்தால் மட்டும் எதிர்ப்பது ஏன்.. சர்ச்சைக்கு எஸ்.வி.சேகர் கருத்து.

0
52

பிகில் படத்தில் விஜய் வயதான தோற்றத்தில் இருக்கும் ராயப்பன் கேரக்டரை மிக வித்யாசமாக வடிவமைத்துள்ளார் அட்லீ. காவி வேட்டி மற்றும் கழுத்தில் சிலுவை இருந்ததால் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் தற்போது பிகில் ரிலீஸ் சமயத்தில் துணி கடைகளில் பரபரப்பாக விற்றுவரும் அந்த உடை பற்றி நடிகர் எஸ்வி சேகர் கருத்து தெரிவித்துள்ளார்.

“இதை பெரிதுபடுத்துவது சரியல்ல என்பது என் கருத்து. விஜய் ஒரு நல்ல நடிகர். அவரது ரசிகர்களுக்காக விற்கப்படும் பொருட்கள். இதில் காவி வேட்டி, ருத்திராட்சம் கூட இருக்கின்றதே. இதை விற்கும் கடைக்காரர்கள் அனைவரும் மாற்று மதத்தினரா? விஜய் விபூதி பூசி நடிக்கும்போது பிடிக்கும் நமக்கு, அவர் சிலுவை அணியும்போது பிடிக்காதது சரியல்ல. அவர் எங்காவது பொது வெளியில் தன் மதத்தை மட்டும் உயர்வாகப் பேசி மற்ற மதத்தைத் தாழ்வாகப் பேசி பார்த்துள்ளீரா. வேற்றுமையில் ஒற்றுமை” என ட்விட் செய்துள்ளார் அவர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here