மீண்டும் இந்த இயக்குனருடனா? சூர்யாவின் அடுத்த படம் பற்றி கசிந்த தகவல்

0
89

நடிகர் சூர்யா ஹிட் கொடுக்க முடியாமல் தொடர்ந்து போராடி வருகிறார். அவரது நடிப்பில் சென்ற மாதம் வந்த காப்பான் படம் 100 கோடிக்கும் மேல் வசூலித்தது என்று தயாரிப்பாளர் லைகா நிறுவனம் அறிவித்து வெற்றி விழாவில் கேக் வெட்டி கொண்டாடினர். ஆனாலும் படம் பெரிய அளவில் லாபம் இல்லை என்று சினிமா வட்டாரத்தில் பேசிக்கொள்கின்றனர்.

இந்நிலையில் சூர்யா தன்னுடைய அடுத்த படமான சூரரை போற்று படத்திலும் நடித்து முடித்துள்ளார். அது டிசம்பர் மாதம் அல்லது பொங்கலுக்கு ரிலீஸ் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்து அவர் யாருடன் கூட்டணி சேர்வார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், மீண்டும் சிங்கம் இயக்குனர் ஹரி உடன் தான் கூட்டணி என தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் சூர்யாவின் தம்பி கார்த்தி தான் இந்த தகவலை உறுதியாக அறிவித்துள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here