விஜய் படத்தை இயக்குகிறாரா சூரரைப்போற்று இயக்குனர்? வெளியிட்ட அறிவிப்பு

0
52

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. இதனைத் தொடர்ந்து தனது அடுத்த படத்திலும் லோகேஷ் கனகராஜுடன் விஜய் இணைவார் என்று கூறப்பட்டது.

அதேபோல் இறுதிச்சுற்று, சூரரைப்போற்று இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் அடுத்ததாக விஜய் நடிப்பார் என்றும், அத்துடன் விஜய் பிறந்தநாளான ஜூன் 22ஆம் தேதி இதுகுறித்து சுதா கொங்கரா அறிவிப்பார் என்றும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாயின.

இந்நிலையில், தான் எந்தவித சமூக வலைத்தளங்களிலும் இல்லை என்றும், விஜய் படத்தை இயக்குவதாக இருந்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும், இந்த கடினமான சூழலில் மக்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும் அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here