திரும்பவும் மொதல்ல இருந்தா… மாநாடு பஞ்சாயத்தில் எடுத்த முடிவு! சிம்பு அம்மா கொடுத்த வாக்குறுதி

0
42

நடிகர் சிம்பு என்றாலே எப்போதும் வம்பு தான். AAA, வந்தா ராஜாவாதான் வருவேன் என அவர் படங்கள் தான் ரிலீஸ் ஆகி தொடர்ந்து தோல்வியடைந்து வருகின்றது என்றால் மறுபுறம் அவர் ஷூட்டிங் வருவதே இல்லை என குற்றச்சாட்டும் வைக்கின்றனர்.

அவர் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட மாநாடு படம் பல முறை ஷூட்டிங் தள்ளிப்போய் இறுதியில் கடுப்பான தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி படத்தை வேறு ஹீரோ வைத்து எடுத்துக்கொள்வதாக அறிவித்துவிட்டார்.
படத்திற்காக தான் கொடுத்த 2 கோடி ரூபாயை திருப்பி கேட்டது தற்போது பஞ்சாயத்தில் சென்று நின்றுள்ளது.

நேற்று முந்தினம் சென்னையில் தயாரிப்பாளர் சங்கத்தில் மாநாடு பஞ்சாயத்து நடந்தது. அதில் தமிழ் சினிமாவில் ஆளுமை மிக்க பல தயாரிப்பாளர்கள் இருந்தனர்.

சிம்புவின் அம்மா உஷா தான் பஞ்சாயத்திற்கு வந்திருந்தார். சிம்பு கொடுத்த தேதிகளை தயாரிப்பாளர் வீணடித்துவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார். ஆனால் சிம்பு இதுவரை செய்த அட்ரோஸிட்டிகளை சொல்லி அவரது வாயை அடைத்துள்ளனர்.

அதன்பிறகு ஒருவழியாக அனைவரும் பேசி மாநாடு படத்தினை மீண்டும் துவங்குவது என முடிவெடுத்துள்ளனர். சிம்புவை காலை 10 மணிக்கு வந்து மாலை 6 மணி வரை நடிக்கவைப்பது என் பொறுப்பு என ஆவது அம்மா உஷா வாக்கு கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.

படம் மீண்டும் துவங்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here