‘மஹா’ – முக்கிய வேடத்தில் நடிக்கும் நண்பன் நாயகன் !

0
38

ஹன்சிகா நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘மஹா’ படம், கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ளது.

இப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நண்பன் ஸ்ரீகாந்த் நடிக்கிறார். இதில் ஸ்ரீகாந்த், போலீஸ் கமிஷனராக நடிக்கிறார்.

ஶ்ரீகாந்த் நடித்திருக்கும் காட்சிகள் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் படம்பிடிக்கப்பட்டுள்ளது.

இக்கதாப்பாத்திரத்திற்காக ஶ்ரீகாந்த் தந்திருக்கும் உழைப்பு இப்படத்தை அவர் சினிமா வாழ்க்கையில் முக்கியமான மைல்கல்லாக மாற்றியுள்ளது என்று படக்குழுவினர் கூறியுள்ளனர்.

இப்படத்தில் கருணாகாரன், தம்பி ராமையா ஆகியோரும் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

வி.மதியழகன் தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் யூ.ஆர்.ஜமீல் இயக்கியுள்ளார். மே மாதம் இப்படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

எஸ்.டி.ஆர் இப்படத்தில் பைலட்டாக நடித்துள்ளது மேலதிக தகவல் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here