மோடி வீட்டில் அவமானப்படுத்தப்பட்டாரா? பாடகர் எஸ்பிபி விளக்கம்

0
32

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் நேற்று முன்தினம் முகநூலில் ஒரு பதிவை போட்டிருந்தார். அதில் தான் பிரதமர் மோடி இந்திய சினிமா நட்சத்திரங்கள் சந்திக்க ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்கு சென்றிருந்தபோது அவமானப்படுத்தப்பட்டதாக தெரிவித்திருந்தார்.

தான் உள்ளே செல்லும்போதே செல்போனை வாங்கிக்கொண்டு டோக்கன் கொடுத்துவிட்டார்கள். ஆனால் உள்ளே சென்று பார்த்தபோது சில நடிகர்கள் செலஃபீ எடுத்து கொண்டிருந்தார்கள் என குறிப்பிட்டிருந்தார்.

ஷாருக் கான் அமீர் கான் போன்றவர்களுக்கு மட்டும் செல்போன் எடுத்துச்செல்ல அனுமதி அளிக்கப்பட்டது பற்றித்தான் அவர் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு பெரிய சர்ச்சையான நிலையில் எஸ்பிபி விளக்கம் அளித்துள்ளார்.

“நான் மோடிக்கு எதிராக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. நான் புகாரும் கூறவில்லை. மற்றவர்களுக்கு கொடுக்கும் அதே மரியாதை எனக்கும் கொடுத்தார்கள். செல்போன் பற்றி ஒரு கேள்விதான் கேட்டேன்” என கூறியுள்ளார் அவர்.

I am grateful to Ramoji Raoji, (Eenadu), because of whom I was able to attend a reception hosted by our Hon. Prime…

Posted by S. P. Balasubrahmanyam on Saturday, November 2, 2019

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here