சூரரைப் போற்று எப்போது ரிலீஸ்? வெளியான தகவல்

0
24

காப்பான் படத்திற்கு பிறகு சூர்யா நடிப்பில் வெளியாக உள்ள படம் சூரரைப் போற்று. இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இந்த படத்தை இயக்கியுள்ளார்.

கொரோனா பாதிப்பு காரணமாக படங்களின் வெளியீடு தள்ளிப்போயுள்ளதால், ஏப்ரல் மாதத்தில் வெளியாகவிருந்த சூர்யாவின் படமும் தள்ளிப்போனது.

இந்நிலையில், ஜூன் மாதத்தில் நிலைமை சரியாகிவிடும் என திரைத்துறையினர் எதிர்பார்க்கின்றனர். இதனால் சுதந்திர தினத்தில் சூரரைப் போற்று படத்தின் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஏர் டெக்கான் நிறுவனர் ஏ.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாறு தான் சூரரைப் போற்று படமாக உருவாகியுள்ளது. சூர்யா ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். மேலும் தெலுங்கு நடிகர் மோகன் பாபுவும் இதில் நடித்துள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here