வயது பிரச்சினை – காதலை நிராகரித்த ப்ரியா பவானி சங்கர்

0
116

கோலிவுட்டில் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வந்த வாலி, குஷி படங்கள் பெரிய வெற்றி பெற்றன.

பின்னர், நியூ, அன்பே ஆருயிரே, இசை உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தும் இயக்கினார்.

தற்போது ராதா மோகன் இயக்கத்தில் பொம்மை என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இதில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.

இவர்கள் மான்ஸ்டர் படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். சமீபத்தில் படத்தின் முதல் தோற்ற போஸ்டரை டுவிட்டரில் படக்குழுவினர் வெளியிட்டனர்.

அந்த போஸ்டரில் பிரியா பவானி சங்கர் படத்தின் கீழே கொஞ்சம் சிம்ரன் கொஞ்சம் திரிஷா போன்று தெரிகிறது இல்லையா என்று எஸ்.ஜே.சூர்யா பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் பொம்மை படப்பிடிப்பில் பிரியா பவானி சங்கர் மீது எஸ்.ஜே.சூர்யா காதல் வயப்பட்டு தனது காதலை அவரிடம் சொன்னதாகவும், அவரது காதலை ஏற்க பிரியா பவானி சங்கர் மறுத்து விட்டதாகவும் தகவல் பரவி வருகிறது.

ஆனால், வயது வித்தியாசத்தை காரணமாக சொல்லி காதலை பிரியா பவானி சங்கர் நிராகரித்ததாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here