தெலுங்கு மாஸ் ஹீரோ படத்தில் நடிக்கிறாரா சிவகார்த்திகேயன்?

0
23

ஹீரோ என்ற படத்தில் கடைசியாக நடித்த சிவகார்த்திகேயன் அயலான், டாக்டர் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க அவரை சிலர் அணுகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கில் மாஸ் ஹீரோவான பவன் கல்யாண் நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சிவகார்த்திகேயனிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

பாகுபலியின் வெற்றிக்கு பிறகு தெலுங்கு நடிகர்கள் தங்கள் படங்களை பல மொழிகளிலும் வெளியாகும் வண்ணம் கதையை தேர்வு செய்து நடித்து வருகின்றனர். இதற்காக மற்ற மொழி நடிகர்களை தங்கள் படங்களில் நடிக்க வைக்கின்றனர்.

குறிப்பாக பிரபல தமிழ் நடிகர்களையே அவர்கள் முதலில் தேர்வு செய்கின்றனர். சமீபத்தில் வெளியான அல்லு அர்ஜுனின் அலா வைகுண்டபுரமுலோ படத்தில் சமுத்திரக்கனி வில்லனாக நடித்திருந்தார்.

இதேபோல் விஜய்சேதுபதியும் வில்லன் வேடத்தில் உப்பெண்ணா படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here