இது கோலிவுட்டின் மூடநம்பிக்கை – சிவகார்த்திகேயன்

0
17

சிவகார்த்திகேயன் தற்போது அயலான், டாக்டர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் கோலிவுட்டில் நிலவும் நம்பிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அதாவது, படத்தின் வெளியீடு தள்ளிப்போனால் வசூல் ரீதியாக வெற்றி பெறாது என்ற நம்பிக்கை கோலிவுட் திரையுலகில் உள்ளது. இது குறித்து சிவகார்த்திகேயன் கூறுகையில்,

‘படத்தின் வெளியீடு தள்ளிப்போனால் வசூல் ரீதியாக வெற்றி பெறாது என பலர் நினைக்கின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல. நாங்கள் ரஜினி முருகன் படத்தின் வெளியீட்டை மூன்று முறை மாற்றினோம். ஆனாலும் படம் வசூலில் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

இப்போது கூட கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் தாமதமாக வெளியாகியும் நல்ல விமர்சனங்களையும், வசூலையும் அடைந்து வெற்றி பெற்றுள்ளது’ என தெரிவித்துள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here