தனுஷின் புதிய படத்துக்கு எதிர்ப்பு

0
27

பரியேறும் பெருமாள் படத்தை இயக்கி பிரபலமான மாரி செல்வராஜ் டைரக்டு செய்யும் தனுஷ் நடிக்கும் புதிய படத்துக்கு கர்ணன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

எஸ்.தாணு தயாரிக்கும் இந்த படம், மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகிறது.

படப்பிடிப்பு நெல்லையில் தொடங்கி உள்ள நிலையில் கர்ணன் பெயரை பயன்படுத்த சிவாஜி சமூக நல பேரவை தலைவர் சந்திரசேகரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தனுஷ் படத்துக்கு கர்ணன் பெயரை வைத்து இருப்பது வருத்தம் அளிக்கிறது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் கர்ணன் பட பெயரை பயன்படுத்துவது சரியல்ல என்றும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here