முன்னணி பாடகி சுசித்ராவை காணவில்லை.. குடும்பத்தினர் புகார்! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்

0
77

பாடகி சுசித்ரா சில வருடங்களுக்கு முன்பு பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியவர். சூச்சிலீக்ஸ் என்ற பெயரில் பல பிரபலங்களில் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் விடீயோக்களை அவர் வெளியிட்டார்.

சில நாட்கள் முன்பு அவர் காணாமல் போய்விட்டார் என கூறி அவரது தங்கை சென்னை போலீசில் புகார் அளித்துள்ளார்.

சுசித்ராவின் செல்போனை ட்ராக் செய்த போலீசார் அவர் ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருப்பது தெரிந்தது. அங்கு சென்று அவரை சந்தித்து விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது அவர் தான் காணாமல் போகவில்லை என விளக்கம் கொடுத்துள்ளார். மேலும் தனக்கு மனநலம் சரியிலை என கூறி மருத்துவமனையில் வலுக்கட்டாயமாக அனுமதித்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

தான் காணாமல் போய்விட்டதாக தங்கை பொய் புகார் அளித்துள்ளார் என்றும் கூறியுள்ளார் அவர்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here