சிம்புவின் இந்த படமும் பாதியில் நிறுத்தம்? தயாரிப்பாளர் அதிர்ச்சி புகார்

0
191

நடிகர் சிம்பு என்றாலே வம்பு தான். அந்த அளவுக்கு அவர் படம் எடுப்பவர்களுக்கு டார்சார் கொடுப்பார் என பலர் கூறி நாம் கேட்டிருக்கிறோம்.

அவர் நடிக்கவேண்டிய மாநாடு படம் சமீபத்தில் ட்ராப் ஆகிவிட்டது என தயாரிப்பாளர் அறிவித்தது உங்களுக்கு நினைவிருக்கும்.

இந்நிலையில் சிம்புவின் மற்றொரு படமும் பாதியில் அப்படியே நிற்கிறது. கன்னடத்தில் ஹிட் ஆன முஃடி என்ற படத்தில் தமிழ் ரீமேக்கில் சிம்பு மற்றும் கவுதம் கார்த்திக் நடித்து வந்தனர்.

ஆனால் அதன் ஷூட்டிங்கில் பங்கேற்காமல் காலம் தாழ்த்தி வருகிறார் சிம்பு. அதனால் இதுபற்றி தயாரிப்பாளர் சங்கத்தில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா புகார் அளித்துள்ளார் என நேற்று செய்திகள் வெளியானது.

ஆனால் இதுபற்றி அவரிடம் கேட்டதற்கு, ‘அடுத்த கட்ட ஷூட்டிங்கிற்காக தேதி ஒதுக்கும்படி சிம்புவிடம் பேசி வருகிறேன். நான் எதுவும் புகார் அளிக்கவில்லை. அது வதந்தி’ என கூறியுள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here