சித் ஸ்ரீராமின் தடையில்லா இசைப் பயணம்

0
20

மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கடல் படம் மூலம் அடியே.. என்ற பாடல் பாடி பாடகராக அறிமுகமானவர் சித் ஸ்ரீராம்.

தற்போது தென்னிந்தியா முழுவதும் நேரடி இசை நிகழ்ச்சி நடத்தவிருக்கிறார். பிப்ரவரி 8ம் தேதி சென்னையில் நிகழ்ச்சி நடத்துகிறார்.

இதுபற்றி அவர் கூறும்போது,’சில வருடங்களுக்கு முன் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எனது குரலில் சில பாடல்கள் பாடி அதனை இ மெயிலில் அவருக்கு அனுப்பினேன். அவர் இருக்கும் பிஸியில் பார்க்க மாட்டார் என்று நினைத்தேன். அதை கேட்டுவிட்டு ‘கடல்’ படத்தில் எனக்கு பாட வாய்ப்பளித்தார். அன்று தொடங்கிய திரைப்பயணம் தடங்கள் இல்லாமல் செல்கிறது.

இளையராஜா, டி.இமான், அனிரூத் என தேர்ந்த இசை கலைஞர்களின் இசையில் பாடி வருவது சந்தோஷம். நாய்ஸ் அண்ட் கிரைன்ஸ் சார்பில் ஆல் லவ் நோ ஹேட் நிகழ்ச்சியாக சென்னையில் தொடங்கி நடக்கும் எனது இசை பயணம் கொச்சி, மதுரை, பெங்களூரிலும் நடக்கிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என 30 பாடல்கள் பாடப்பட உள்ளன.

நாட்டுப்புறக் கலைஞர்களும் இந்நிகழ்ச்சியில் பாட உள்ளனர்’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here