மாஸ் ஹீரோவுக்கு மீண்டும் ஜோடியாகும் நடிக்கும் ஸ்ருதிஹாசன்

0
13

ஹிந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான பிங்க் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து, அந்த படத்தின் தமிழ் ரீமேக்கான நேர்கொண்ட பார்வையில் அஜித், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்தனர். அஜித்துக்கு ஜோடியாக வித்யாபாலன் நடித்தார்.

இந்நிலையில், தெலுங்கிலும் இந்த படம் ரீமேக் ஆக உள்ளது. அஜித் வேடத்தில் தெலுங்கில் மாஸ் ஹீரோவான பவன் கல்யாண் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிக்க ஸ்ருதிஹாசன் தற்போது ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வக்கீல் சாப் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை ஸ்ரீராம் வேணு இயக்குகிறார். ஸ்ருதிஹாசன் ஏற்கனவே காப்பர்சிங் படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here