குடிப்பது இன்றைய கலாச்சாரம்.. போதை பழக்கம் பற்றி கோபத்துடன் ஸ்ருதி ஹாசன் பேச்சு

0
46

நடிகை ஸ்ருதி ஹாசன் பற்றி ஒரு செய்தி கடந்த சில வாரங்களாக பரபரப்பாக பேசப்பட்டது. நடிகைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு போதை பழக்கம் அதிகம் இருந்ததாகவும். அதன் பிறகு சிகிச்சை எடுத்துக்கொண்டு அதில் இருந்து மீண்டு வந்ததாகவும் கூறப்பட்டது.

இது பற்றி ஸ்ருதி ஹாசன் அளித்த பேட்டி ஒன்றில் தான் குடிப்பதை நிறுத்திவிட்டேன் என கூறியது தான இவ்ளோ பெரிய பரபரப்புக்கு காரணம்.

தான் அளித்த பேட்டி இவ்வளவு பரபரப்பாக பேசப்பட்டது பற்றி தற்போது பேசியுள்ள ஸ்ருதி “குடிப்பது இன்றைய கலாச்சாரம். அனைவரும் குடிக்கிறார்கள். ஆனால் யாரும் அது பற்றி வெளியில் பேசுவதில்லை. இது 2019. நான் குடிப்பதை நிறுத்திவிட்டேன் என்று தான் கூறினேன். இதை அளவுக்கு அதிகமாக ஊதி பெரிதாக்கிவிட்டார்கள்” என ஸ்ருதி ஹாசன் கோபத்துடன் பேசியுள்ளார்.

Please wait...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here