மல்லுவுட்டில் இஷக், கும்பளங்கி நைட்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமான ஷேன் நிகம், சமீபத்தில் சர்ச்சையில் சிக்கியது நாம் அறிந்ததே.
வெயில், குர்பானி படங்களுக்கு அதிக சம்பளம் கேட்ட போது, அதற்கு தயாரிப்பாளர் மறுப்பு தெரிவித்ததால், அப்படத்திற்காக நீண்ட வளர்த்த தனது தலைமுடியை வெட்டி அதிர்ச்சி அளித்தார்.
இதனால் அவர் நடித்துவரும் வெயில், குர்பானி படங்கள் கைவிடப்பட்டன. இந்த விவகாரம் மலையாள திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் படத்தில் ஷேன் நிகம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர் நடிக்க உள்ள காட்சிகள் ரஷ்யாவில் படமாக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதன்மூலம் இவர் தமிழ் திரையுலகில் அறிமுகமாக உள்ளார் நிகம்.
இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாக இருக்கிறது. 2020-ம் ஆண்டு ஏப்ரல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.