மறு ஒளிபரப்பாக உள்ள சக்திமான் ! விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0
31
Actor Mukesh Khanna in tv serial SHAKTIMAN. Express archive photo *** Local Caption *** Actor Mukesh Khanna in tv serial SHAKTIMAN.

மத்திய அரசின் தொலைக்காட்சியான தூர்தர்ஷனில் சக்திமான் தொடரை மீண்டும் ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்று, சக்திமான் தொடரின் கதாநாயகன் முகேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.

சக்திமான் தொடர் தூர்தர்ஷனில் 1997 முதல் 2005 வரை 8 ஆண்டுகள் 520 எபிசோடுகள் ஒளிபரப்பப்பட்டது. இந்த தொடர் குழந்தைகள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.

அதேபோல் 1980-களில் ஒளிபரப்பாகி வரவேற்பை பெற்ற ராமானந்த் சாகரின் ராமாயணம், பி.ஆர்.சோப்ராவின் மகாபாரதம் மற்றும் சக்திமான் தொடர்களை மீண்டும் மறு ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.

இதை ஏற்று கடந்த சனிக்கிழமை முதல் தூர்தர்ஷன் நேஷனல் தொலைக்காட்சியில் ராமாயணம் தொடர், தினமும் காலை 9 மணிமுதல் 10 மணிவரை ஒரு எபிஷோடும், இரவு 9 மணிமுதல் 10 மணிவரை இன்னொரு எபிஷோடும் ஒளிபரப்பாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here