சீறு திரை விமர்சனம் !

0
218

றெக்க இயக்குனர் ரத்ன சிவா இயக்கத்தில் ஜீவா மாஸ் களத்தில் களம் இறங்கியிருக்கும் படம் தான் சீறு.

மாயவரத்தில் கேபிள் டிவி வைத்து தன் தங்கையுடன் வாழ்ந்து வருகிறார் ஜீவா. தங்கை கர்ப்பமாக இருக்க அவரை உள்ளங்கையில் வைத்து தாங்கின்றார்.

இந்நிலையில் ஊரில் எம்எல்ஏ செய்யும் கெட்ட வேலைகளை ஜீவா தன் கேபிள் சேனல் மூலம் வெளியே கொண்டு வர, ஒரு கட்டத்தில் ஜீவாவை கொல்ல முயற்சி செய்கிறார் அந்த எம்எல்ஏ.

அதற்காக சென்னையில் உள்ள மல்லி என்பவரை அழைக்கின்றார், மல்லி ஜீவாவை தேடி மாயவரம் வர, அங்கு ஜீவா தங்கச்சிக்கு மல்லி உதவ, அன்றிலிருந்து ஜீவா மல்லியை தன் நண்பனாக நினைக்கின்றார்.

அவரை தேடி ஜீவா சென்னை வர, அப்போது தான் தெரிகின்றது மல்லி உயிருக்கு ஒரு பெரிய ஆள் மூலம் ஆபத்து என்று ஜீவாவிற்கு தெரிய வர, அதன் பிறகு மல்லியை ஜீவா காப்பாற்றினாரா? அந்த பெரிய ஆள் யார்? என்பதே படத்தோட மீதிக்கதை.

கச்சேரி ஆரம்பம், சிங்கம் புலி படங்களைப் போல் தான் சீறு படத்திலும் ஜீவா நடித்துள்ளார். அதிலும் தன் தங்கையிடம் பாப்பா பாப்பா என்று பேசுகையில் எமோஷ்னல் சீனிலும் திருப்பாச்சி விஜய் போல் ஸ்கோர் செய்கின்றார்.

தன் வழக்கமான கலாய் ஸ்டைலிலும், எனக்கே சென்னை லாங்குவேஜா, நீ காமெடி பண்ணா சிரிப்பே வரமாட்டுது மச்சி என்று சதீஷை கலாய்ப்பது என பழைய ஜீவாவின் அதே கலகலப்பு.

வருண் மல்லியாக கலக்கியுள்ளார், அவர் இதுவரை நடித்த படங்களிலேயே இது தான் நல்ல அழுத்தமான கதாபாத்திரம் என்று சொல்லி விடலாம்.

ரத்ன சிவா வைத்துள்ள மாஸ் காட்சிகள் ஜீவாவிற்கு செட் ஆகியுள்ளது.

படத்தின் பெரிய பலம் டி.இமானின் பின்னணி இசை, பாடல்கள் இமான் ஸ்டைலில் கேட்டதும் கவரவில்லை என்றாலும், கேட்க கேட்க பிடிக்கும் ரகம் தான்

ப்ரசன்னா குமாரின் ஒளிப்பதிவில் செட் எது, ரியல் எது என்றே தெரியவில்லை, மிக தத்ரூபமாக பல காட்சிகளை படப்பிடித்துள்ளார்,

விறுவிறு என சென்ற கதையில் ப்ளாஸ்பேக் மட்டும் எடிட்டர் கிஷோர் லாரன்ஸ் கொஞ்சம் கத்திரி போட்டு இருக்கலாம்.

ஆனால், அது கதைக்கு தேவை என்பதால் அவரால் எதுவும் செய்யமுடியாத நிலையாக தான் இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here